2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஆட்சிக்கு வரும் முன் அட்டகாசம் ஆரம்பம்’

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை, வன்மையாக கண்டித்துள்ள  ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி மயந்த திஸாநாயக்க, ஆட்சிக்கு வரும் முன்னரே அட்டகாசத்தை தொடங்கிவிட்டனர் என்றார். 

நுவரெலியா மாவட்டத்தில் நவீன் திஸாநாயக்க அரசியலுக்குள் பிரவேசிக்கும்போதும் இதேபோன்றதொரு தாக்குதலுக்கு இலக்கானார். எனினும், அப்போது அநுர பண்டாரநாயக்க இருந்ததால் நவீன் தப்பிக்கொண்டார்” என்றார்.   

எவ்வாறாயினும், ஆட்சிக்கும் வரும் முன்பே இவர்கள் அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டனர் எனத் தெரிவித்த அவர்,  சம்பவம் தொடர்பிலான  விசாரணைகளை பொலிஸார் துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென்றார். 

கொழும்பில், நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
புதிய கழிவு முகாமைத்துவ திட்டத்தை  பிரதேச சபை மட்டத்தில் ஆரம்பிப்பதாக கோட்டாபய கூறியுள்ளார். இது மீதொட்டுமுல்லை குப்பை மலைகளை, நாடு முழுவதும் உருவாக்கும் முயற்சியாகும் என்றார்.   

“மீதொட்டுமுல்லையில், 2 ஏக்கரில் மாத்திரமே குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதி கிடைத்திருந்தது. எனினும், அங்கு 18 ஏக்கருக்கு குப்பைகள் நிரப்பப்பட்டன. அதனால் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டன. அதற்கு காரணமானவர்களே, நாடளாவிய ரீதியில் குப்பை மலைகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்“” என்றார்.

“அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், சொந்த வீடுகள் இல்லாத சகலருக்கும் வீடுகளை பெற்றுகொடுப்பதோடு, ஓட்டோ சாரதிகளுக்கு சலுகை அடிப்படையில் கடன்களை பெற்றுகொடுப்பார்” எனவும் தெரிவித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .