2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘4ஆம் மாடி மாறும்’

Kanagaraj   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆகையால் பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி), கட்டாயம் மாற்றப்படவேண்டும் என்று அரசாங்கம், நேற்றுத் தெரிவித்தது.   அத்திணைக்களத்தில், நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சட்டம் மற்றும் ஒழுங்குகள் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக, நான்காம் மாடி தொடர்பில் ஒருவகையான அச்சநிலைமை ஏற்படும். நீங்கள் சரியோ அல்லது பிழையோ என்பது பிரச்சினையில்லை. ஏன் இங்கே அழைத்துவரப்பட்டீர்கள் என்பதுதான் பிரச்சினையாகும். தொழில்நுட்பங்கள் யாவும் நல்லது. எவரும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் யாரும் கவலைக்கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தடயவியலை மேம்படுத்துவதற்காக, சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .