2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இடம்பெயர் மக்களின் நிலைமை குறித்து ராஜபக்ஸவுக்கு மன்மோகன் வலியுறுத்தல்

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெயர் மக்களின் நிலைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விரு விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உலகமயமாதல், பொருளாதார நெருக்கடிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் பயங்கரவாத ஒழிப்புத் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரு தலைவர்களுக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றது.  புதுடில்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மத்திய அரசு சார்பில் செங்கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

இதில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள். இதனை அடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதனையடுத்து இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் ஒருங்கிணைந்த கூட்டு பொருளாதார ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X