2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இந்திய பெண்ணுக்கு வாழ்நாள் சிறை

Kanagaraj   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

448 கிராம் கொக்கேன் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தல், தம்வசம் வைத்திருந்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட இந்தியப் பெண்ணுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம், வாழ்நாள் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அப்பெண், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 2009ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதியன்று இலங்கைக்கு வந்தபோது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இதனையடுத்து அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்  அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில், 62 கிராம் மற்றும் 52 மில்லிகிராம் கொக்கோன் இருக்கின்றமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சந்தேகநபருக்க எதிராக சட்டமா அதிபரினால் அதிகுற்றச்சாட்டு பத்திரம், நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை இடம்பெற்றுகொண்டிருந்த போது, சந்தேகநபரான இந்தியப் பெண், தன்மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளை கடந்த 18ஆம் திகதி  புதன்கிழமையன்று ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்தே நீதிபதி அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .