2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கட்சி செயலாளர்களின் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பம்

Super User   / 2010 மார்ச் 12 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்படுகின்ற அரசாங்கத்தின் போக்குத்  தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கவுடன் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தெரிவித்தது.

தேர்தல்கள் ஆணையாளருடன் இன்று நடைபெறவிருக்கும் கூட்டம் தொடர்பில் தமிழ்மிரர் இணையதளம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலியிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், தற்போது இடம்பெற்றுவருகின்ற தேர்தல் வன்முறைகள், அரசியல் பழிவாங்கல்கள், இடம்பெயர்ந்த மக்களுக்கு உலக வங்கியினால் வழங்கப்படும் ஆதாரங்களை அரசியலுக்குப் பயன்படுத்தல் ஆகியன தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவிலிருந்து, சாதாரண அரசாங்க ஊழியர்வரை அரசாங்கத்தினால் பழிவாங்கப்படுவதாகவும் ஹஸன் அலி சுட்டிக்காட்டினார்.

சமூர்த்தி ஊழியர்களினால், சமூர்த்தி பெறுகின்றவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் தமக்கு  முறைப்பாடு கிடைத்திருப்பதுடன், இது தொடர்பிலும் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இன்று மாலை 3 மணிக்கு கட்சிச் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடவிருப்பதாக தமிழ்மிரர் இணையதளத்திடம் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் சுமணசிறி உறுதிப்படுத்தினார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .