2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'இராஜாங்க அமைச்சர்கள் குறைக்கப்படவிருந்தனர்'

J.A. George   / 2019 நவம்பர் 27 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது வழங்கப்பட்டுள்ள பதவிகள் வரபிரசாதம் அல்லவென்றும் அவை மிகமுக்கிய பொறுப்புகள் என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை நியமித்த பின்னர் உரையாற்றுகையில் இன்று (27)  ஜனாதிபதி இதனைக் கூறினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,  “மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே எமக்கு வாக்களித்துள்ளனர். இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எமக்கு விருப்பம் இருந்தாலும்,  எமது கொள்கை பிரகடனம் தொடர்பில் பார்க்கும் போது எமக்கு அதிகளவான பொறுப்புகள் உள்ளன. 

அதன் காரணமாகவே, அதே விதத்தில் பதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்தோம்.

தமக்கு கிடைத்த அமைச்சு பதவி தொடர்பில் சந்தேகங்கள் இருக்கலாம். எனினும், பொறுப்புகள் அதிகம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களின் தேவைகளை பார்த்து இந்த அமைச்சு பதவிகள் பிரிக்கப்பட்டுள்ளன.  ரயில் சேவை இராஜாங்க அமைச்சு பதவியை எடுத்துக்கொண்டால், இன்று ரயில் சேவை தொடர்பில் பாரிய தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

பதவிகள் கிடைக்காவிட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றக்கூடிய பொறுப்புகள் உள்ளன.

அந்த பொறுப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X