2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இராணுவ பாதுகாப்பில் ஜெனரல் பொன்சேகா;ஐரோப்பிய ஒன்றியம் கவலை

Super User   / 2010 ஏப்ரல் 30 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச்சட்ட விதிகளை தொடர்ந்து அமுல்படுத்துவது மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவப் பாதுகாப்பில் தடுத்துவைத்திருப்பது ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலையடைந்துள்ளது.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக பேட்டியிலேயே, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுக்கான தூதுக் குழுவின் தலைவர் பேர்னாட் சாவேஜ் இவ்வாறு கவலை வெளியிட்டார்.

எனினும், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாத நிலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் எதிர்பார்க்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையைப் பொறுத்தாகும் என்பதுடன், ஒகஸ்ட் மாதத்திலிருந்து இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை விலக்கிக்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஓர் உறுதியான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் பேர்னாட் சாவேஜ் குறிப்பிட்டார்.

மனித உரிமை மீறல்கள், தொழித்துறை உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை ஒழுங்கை கடைப்பிடிக்குமாயின், இன்னொரு சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தனது முடிவை சாதகமான முறையில் பரிசீலிக்கும் எனவும் பேர்னாட் சாவேஜ்   தெரிவித்தார்.

வர்த்தக சலுகைகளை வென்றெடுப்பதற்கு அனுகூலமாக இருக்கும் எனவும் பேர்னாட் சாவேஜ் மேலும் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .