2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரத்தப் பரிசோதனை அறிக்கை, 2 மணிநேரத்தில் வேண்டும்

Editorial   / 2017 ஜூலை 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு, தனியார் வைத்தியசாலைகளில் விநியோகிக்கப்படும் இரத்தப் பரிசோதனை அறிக்கை இரண்டு மணிநேரத்துக்குள் விநியோகிக்கப்படவேண்டும். அவ்வாறு விநியோகிக்கப்படாத அறிக்கை, செல்லுப்படியற்றதாகும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்களுடன், நேற்று (21) நடத்திய கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில தனியார் வைத்தியசாலைகளில்,இரத்தப்பரிசோதனை அறிக்கையை முழுமையாக வழங்குவதற்கு, இரண்டு மணித்தியாலத்துக்கு மேல் செல்கிறன என, வைத்தியர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆகையால், அரச வைத்தியசாலைகளுக்கு வந்து, இலவசமாகவே இரத்தப்பரிசோதனையை முழுமையாகச் செய்துகொள்ளலாம் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

அரச வைத்தியசாலைகளில், ஒரு மணித்தியாலத்துக்குள் இரத்தப் பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளமுடியும். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 10 நியமிடங்களுக்கு, இரத்தப் பரிசோதனை அறிக்கை வழங்கப்படுகின்றது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .