2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இருவருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த மற்றும் அவரது சகோதரரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த ​ஆகிய இருவரும், மே மாதம் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்விருவரும் பிணை நிபந்தனைகளை மீறியமையை அடுத்தே, அவ்விருவருக்கான பிணையை இரத்துச் செய்த சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி.எஸ் மொராயஸ், அவ்விருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, நேற்று (19) உத்தரவிட்டுள்ளார். 

சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்று கையொப்பமிடவேண்டுமென்ற நிபந்தனை பிணையை, நீதிபதி ஏற்கெனவே விதித்திருந்தார்.  

எனினும், அந்த நிபந்தனைப் பிணையை, கடந்த வருடம்  ஓகஸ்ட் மாதத்திலிருந்து மீறியுள்ளனரென, சிலாபம் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர் இதனையடுத்தே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.  

ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரை, 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதியன்று தாக்கியமை, அவரது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .