2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

Super User   / 2010 மே 17 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுகந்தினி ரட்னம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றதாக சற்றுமுன் தமிழ்மிரர் இணையத்தளத்திடம்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இதன்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து, சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததுடன்,  வவுனியா நகரசபைத் தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததாகவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

வன்னியில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து வவுனியா நகரிலுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் இடம்பெற்றதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற மேற்படி நினைவஞ்சலி நிகழ்வானது வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மன்றத்திலேயே நடத்த ஏற்பாடாகியிருந்தது.

இருப்பினும், பிரதேச பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அதனை வவுனிய நகரசபையில் நடத்த நேர்ந்ததாக சிவசக்தி ஆனந்தன்  குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • Jananajakan Tuesday, 18 May 2010 06:23 AM

    இறந்தவர்களின் நினைவு வழிபாடு நடத்தக்கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .