2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இறுதிக்கட்ட யுத்த விசாரணைக்காக நிபுணர் குழு அமைப்பு-ஐ.நா செயலாளர் பான் கீ மூன்

Super User   / 2010 மே 25 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிபுணர்கள் குழுவை  அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின்  தலைமையகத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை நேற்று சந்தித்து பேசுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர்கள் குழுவை அமைக்கு திட்டத்தில் மாற்றமில்லை எனவும் பான் கீ மூன் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர்கள் குழு தமக்கு ஆலோசனை வழங்குவார்கள் எனவும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துமாறும், அந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறும் ஜி.எல்.பீரிஸிடம், பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் உட்பட சிரேஷ்ட அமெரிக்க இராஜதந்திரிகளை ஜி.எல்.பீரிஸ் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .