2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை தமிழ் சிறுவர் நலன் நிதிக்காக சிட்னியில் "வைரத்தில் முத்து" கலை விழா

Super User   / 2010 ஜூன் 29 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழ் சிறுவர்களின் நல நிதிக்காக அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் கவிஞர் வைரமுத்துவின் செம்மொழி தமிழ் பாடல்கள் கலை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 7ஆயிரம் திரைப்படப் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து, அவற்றில் ஆங்கிலச் சொல் கலக்கப்படாத செம்மொழிப் பாடல்களை  மட்டும் இந்த நிகழ்ச்சியில் வழங்கவுள்ளார். வைரத்தில் முத்துகள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கலை நிகழ்ச்சியில், இந்திய நடிகர் விவேக், பின்னணி பாடகர்களான மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, சுவேதா மேனன் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜுலை 3ஆம் திகதி மாலை 7 மணிக்கும், மெல்போர்ன் நகரில் ஜுலை 4ஆம் திகதி மாலை 6 மணிக்கும் இந்த கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவுஸ்திரேலியாவிலுள்ள சரிந்தா அறக்கட்டளை சார்பாக ஏ.வி.மோகன் ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியானது, இலங்கைத் தமிழ் சிறுவர்களின் நலனுக்காக பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Wednesday, 30 June 2010 04:38 AM

    வைரமுத்து ஒரு விளம்பரப்பிரியர். இவர் ஏதாவது யாருக்காகவேனும் செய்கிறார் என்றால் அதன் பின்னணியை ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .