2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு வருகிறார் தெலுங்கானா அமைச்சர்

Gavitha   / 2016 ஜூலை 20 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹொட்டலில், அடுத்த மாதம் 11ஆம், 12ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள முதலாவது இலங்கை மனித மூலவள மாநாடு, 2016இன் ஆரம்ப அமர்வுக்கு விசேட அதிதியாக இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தகவல் தொழில்நுட்பம், மாநகர நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் கைத்தொழில்கள் அமைச்சர் கே.டி.ராம ராவ் அழைக்கப்பட்டுள்ளார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இணைப்பில் இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குறித்த மாநாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் முகமான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை வடிவமைப்பதற்கான மனித மூலவள வாய்ப்புகள் பற்றி 'திறமை மூலவளமாக இலங்கை' எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தின் சவாலான தேவைகளை சந்திக்கும் முகமாக, எவ்வாறு வேலைவாய்ப்புகளை அதிகரித்து, பணியாளர்கள் மற்றும் வேலை எதிர்பார்த்திருப்போரிடையே போட்டித்தன்மையை உருவாக்கி பணியாட்தொகுதியை மாநில அரசாங்கங்கள் கட்டமைக்கின்றன என்பது தொடர்பாக, 'எதிர்காலத்துக்கு தயாரான ஊழியப்படையைக் கட்டமைத்தல்' எனும் தலைப்பில் ராவ் உரையாற்றவுள்ளதோடு, உலக வங்கியின் உத்தி மற்றும் நடவடிக்கைகள், மனித அபிவிருத்தி மற்றும் கல்விப் பணிப்பாளர் டொக்டர் அமித் தார், 'எதிர்காலத்துக்கு தயாரான படையை நோக்கி' எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .