2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இ.மி.சபையின் அவசர அழைப்புக்கு புதிய இலக்கம் அறிமுகம்

Princiya Dixci   / 2016 மார்ச் 22 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின் அவசர அழைப்பு, தடங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் செயற்படவில்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் 1987 என்ற புதியதொரு அவசர அழைப்பு இலக்கத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

தெஹிவளை மற்றும் கல்கிஸை வாழ் மக்கள், இவ்வாரம் மின்தடை தொடர்பில் விசாரிக்க, 011-4418418 என்ற இலக்கத்துக்கு அழைப்புகளை மேற்கொண்டபோது பதில் கிடைக்காமையால் அவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

இயந்திரம் மூலமாக விசாரணைகளுக்கு வழங்கப்பட்ட பதில், அழைத்தவர்களை, தடுக்கி ஆளிளைச் சரிபார்க்கும் படியும் கட்டணங்களைச் செலுத்தி மின்வெட்டப்படுவதைத் தவிர்க்கும் படியும் கூறியது.

இலங்கை மின்சார சபையின் மேல்மாகாணப் பிரிவு பொது முகாமையாளரிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர் அழைப்புகளுக்குப் பதில் கிடைக்கவில்லை எனக் கூறிப்பிடப்பட்டதை மறுத்தார்.

'14 இணைப்புகளில் 03 தொலைபேசி ஊழியர்கள் தான் வேலை செய்கின்றர். எனவே, சகல அழைப்புக்களுக்கும் பதிலளிப்பது சாத்தியமானதல்ல' என அவர் கூறினார்.

எனினும், இந்த முறைப்பாடுகளைத் தான் கவனத்தில் எடுத்து தொழில் நுட்பக்கோளாறுகள் இல்லாதிருப்பதை உறுதி செய்வதாகக் கூறினார். 

இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபாலவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, இரவு நேரம் கடமையில் இருக்க வேண்டியவர்கள் வந்திருக்கவில்லை எனவும் சிலர் தமது வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை எனவும் கூறினார்.

'என்ன நடந்ததென்று நாம் அறியோம். ஆனால், நாம் அறிமுகம் செய்துள்ள 1987 அவசர அழைப்பு இணைப்பு மூலம் நுகர்வோர் எந்நேரமும் எம்முடன் தொடர்பை ஏற்படுத்தலாம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .