2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘உண்டியல் பணத்துக்கும் வரி அறவிடப்படும்’

Editorial   / 2017 மே 25 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய உள்நாட்டு வருமான வரி சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதன் பிரகாரம், தொண்டு நிறுவனங்களின் உண்டியல்களில் விழும் பணத்துக்கு வரி அறவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.  

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“உள்நாட்டு இறைவரி திணைக்களத்தை செயலிழக்கும் நிலைமைக்கு கொண்டு சென்று, அதனை தனியார்ப்படுத்தும் நடவடிக்கை மூலம் மக்களுக்கு பெரும் வரிச்சுமை ஏற்படும்.  

இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து எப்படியாவது நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.  

புதிய உள்நாட்டு வருமான வரிச் சட்டத்தின் மூலம் வருடாந்தம் 5 இலட்சம் ரூபாய் வருமானம் பெறும் தொழில் நிபுணர் ஒருவர் 5 இலட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாயை வருமானமாக பெற்றால், 4 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டி ஏற்படும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .