2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘உதவிக் கரம் நீட்டுவதற்கு தயாராகவே இருக்கிறோம்’

Editorial   / 2017 ஜூன் 08 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கை மக்களுக்கு, தன்னுடைய இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தில், இலங்கைக்குத் தொடர்ந்து உதவி செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்தச் சந்திப்புகள் தொடர்பில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்தியை, இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

இலங்கையில், பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததற்கும், பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதற்கும் பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இந்த விவகாரத்தில் இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலில் சந்தித்துப் பேசினார். 

அப்போது அவரிடம், சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க, இலங்கைக்கு கடந்த மாதம் தாம் வந்ததை ஆக்கப்பூர்வமான மற்றும் நினைவில் நீங்காத பயணமாக அமைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி இதன் போது குறிப்பிட்டார். 

இவற்றைக் கேட்ட, அமைச்சர் ரவி கருணாநாயக்க, மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் இலங்கையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து இந்தியா உடனடியாக உதவி செய்ததற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தியாவுடனான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் கருணநாயக்க இதன்போது கூறினார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க,சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையேயான விவகாரங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சுஷ்மா சுவராஜும், கருணநாயக்கவும் பேசினர். மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக இந்தியாவும், இலங்கையும் கடந்த சில மாதங்களாக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த மீனவ விவகாரம் குறித்தும், இருவரும் விரிவாக கலந்துரையாடியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .