2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளரிடம் சிஐடீ விசாரணை

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம், குற்றப்புலனாய்வுப் துறையினர் இன்று (18) இரண்டு மணிநேர விசாரணையை மேற்கொண்டனர்.

யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது என்றும் முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, ஊடகவியலாளர் பிரதீபனை, இம்மாதம் 10ஆம் திகதியன்று, கொழும்புக்கு வருமாறு குற்றபுலனாய்வுத் துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர். எனினும், விபத்தில் சிக்கி நடமாட முடியாத நிலையில் உள்ளமையால், கொழும்புக்கு வரமுடியாது என, பிரதீபன் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குற்றப் புலனாய்வுத்துறையினர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வைத்து, பிரதீபனிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .