2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க

Editorial   / 2019 நவம்பர் 27 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் இதுவரை காணப்பட்ட சம்பிரதாயத்தை உடைத்தெறிய கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய,  ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான ரணில் விக்கிமரசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட வேண்டும்.

இந்த விடயத்தில் பிரச்சினைகள் காணப்பட்டால் கட்சிக்குள் அது தொடர்பில் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .