2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மஹிந்த ஏற்கார்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னோடுள்ள கட்சிகளுக்கு அரசியல் தலைமை வழங்கத் தயாராகவுள்ள போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மாட்டார் எனவும் அவையில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டாமென அவரது நெருங்கிய சகாக்கள்  ஆலோசனை கூறியுள்ள நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதேசமயம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்லவை மீண்டும் அவைத் தலைவராகவும் கயந்த கருணாதிலக்கவை அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .