2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

"எந்தவொரு விசாரணையையும் சந்திக்க தயார்" - இந்தியாவில் அமைச்சர் டக்ளஸ்

Super User   / 2010 ஜூன் 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

"என்னுடைய இந்திய விஜயம் சட்டவிரோதமானது அல்ல. இதேவேளை இங்கு விஜயம் செய்யக்கூடாது என்று இந்திய அரசாங்கம் எனக்கு எதுவித தடையினையும் விதிக்கவில்லை" என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இந்தியா சென்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
இந்நிலையில், புதுடில்லியில் நிருபர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,  இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதனால் எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நான் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
 
தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலாளரும் சட்டத்தரணியுமான புகழேந்தி என்பவர், அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா மீது ஏற்கனவே  கொலை, கொள்ளை தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள அமைச்சரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் அன்றும் அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .