2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

225 எம்.பி.க்களையும் அமைச்சர்களாக்குவதில் ஆச்சரியம் இல்லை: சோபித தேரர்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அதிகளவிலான அமைச்சர்களை நியமிக்கும் தீர்மானத்தை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரர் கடுமையாக சாடியுள்ளார். 

அதிகளவிலான அமைச்சர்களை நியமிப்பது நகைப்புக்குரியதும், கேலிக்கூத்தானதும் என்று தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காரணமில்லாமல் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமித்ததாகவும், ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே தவறுகளை விடமாட்டார் என தான் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறு சென்றால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

தேசிய அரசாங்கம் ஒன்று அமையும்போது எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று 19ஆவது திருத்த சட்டத்தில் சரியாக இல்லையென்றும், அது இரு கட்சிகளின் தீர்மானம் எடுப்பவர்களாலேயே முடிவுசெய்யப்படும் எனவும் சோபித்த  தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .