2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான நிபுணர் குழு சந்திப்பு

Super User   / 2010 ஜூன் 28 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயத்தால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முதற்தடவையாக இன்று கூடி ஆராய்ந்ததாக அக்குழுவின் தலைவர் மார்சுகி தருஸ்மன் டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மேலும், இந்த நிபுணர் குழு உறுப்பினர்கள் மிக விரைவில் ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகத்தர்களை சந்திக்கவுள்ளனர். அச்சந்திப்பில் அவர்கள் இலங்கை தொடர்பாக எதிர்பார்க்கும் விடயங்களை தெரிந்து கொண்ட பின்னரே இக்குழுவின் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளை  சந்திக்க வேண்டும். அதன் பிற்பாடு தான் இக்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடி ஒரு தீர்மானத்துற்கு வரலாம் என  இந்நிபுணர் குழுவின் தலைவர் மார்சுகி தருஸ்மன் டெய்லிமிரர் இணையதளத்திற்கு நியோக்கிலிருந்து தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X