2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் மீள்பேச்சுவார்த்தை - ரணில்

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றால், சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவது தொடர்பில்  மீள்பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்
இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றால், இது குறித்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்ஹ குறிப்பிட்டார்.

பொருளாதார அபிவிருத்தியே தமது கொள்கை எனக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர், நாட்டின் மொத்த வருமானத்திற்கு எதிராக கடன்தொகை அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வருடாந்த வருமானம் 725 பில்லியன் ரூபா மாத்திரமே என்பதுடன், எனினும், கடன் மற்றும் வட்டி 825 ரூபா செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.

நட்பு நாடுகளிடமிருந்து ஒரு வருடகாலத்திற்கான கடன் கேட்கவிருப்பதாகவும், ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு என்றும் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X