2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க.தலைமைத்துவ பதவியிலிருந்து விலக ரணில் விக்கிரமசிங்ஹ இணக்கம்

Super User   / 2010 மே 11 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தனது தலைமைத்துவம் தொடர்பில் திருப்தியின்மை காணப்பட்டால்,  தலைமைத்துவ பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.

இவ்வாறு ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்ததாக டெயிலிமிரர் இணையதளத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதையிட்டு, அந்தக் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்ஹ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கட்சித் தலைமைத்துவத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசங்களைப் பெற்றிருக்கும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டிருந்தது.





You May Also Like

  Comments - 0

  • abdul Tuesday, 11 May 2010 06:27 PM

    இப்போது தான் இவர் இணக்கம் தெரிவித்துள்ளார். எப்போதோ விலக வேண்டியவர்.

    Reply : 0       0

    RAVI Wednesday, 12 May 2010 11:24 PM

    புரிந்து கொண்டதுக்கு கோடி நன்றிகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X