2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒரே நாளில் கம்பனிகளை பதிவு செய்யும் ஒப்பந்தம் கைச்சாத்து

Kogilavani   / 2017 மே 31 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பனிகளை, இலத்திரனியல் அடிப்படையில் தன்னியக்க முறையில் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், நேற்று (30) கைச்சாத்திடப்பட்டது.   

கம்பனிப் பதிவாளர் திணைக்களத்துக்கும், கே.பி.எம்.ஜீ - ஸ்ரீ லங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்படுத்த 57 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது என, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்தத் தொகையை, கம்பனிப் பதிவாளர் திணைக்களம், வரியிறுப்பாளர்களிடமிருந்து அறவிடாமல் கம்பனிப் பதிவாளர் நிதியத்திடமிருந்து பெற்று வழங்குகிறது.  

இந்த புதிய திட்டம், நேற்றுத் தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதோடு, மார்ச் இறுதியில் நிறைவுபெறுகிறது. அதன் பின்னர், ஒரே நாளில் புதிய கம்பனிகளை இலத்திரனியல் முறையின் கீழ், இணையம் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும்.   

இதுவரை காலமும், ஒரு கம்பனியைப் பதிவு செய்வதற்கு இருந்த பல்வேறு சிரமங்கள், இந்தப் புதிய முறை மூலம் நீக்கப்படுவதோடு மாத்திரமின்றி மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை.   

வெளிநாடுகளில் வாழ்வோர், இலங்கையில் கம்பனியொன்றைப் பதிவு செய்ய வேண்டுமாயின், இங்கு வந்து சிரமப்பட வேண்டியிருந்த நிலை இனிமேல் இருக்காது. அவர்கள் தமது ஆவணங்களையும், கடவுச்சீட்டு மற்றும் விவரங்களையும் இணையம் மூலம் வழங்கி அவை சரிபார்க்கப்பட்ட பின், தமது கம்பனியை ஒரே நாளில் பதிவு செய்து கொள்ள இந்த புதியத் திட்டம் வழிவகுக்கிறது என, குறிப்பிடப்பட்டிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .