2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒழுக்காற்று விசாரணையை நிறுத்துமாறு கடிதம்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கு எதிரான ஓழுக்காற்று நடவடிக்கையை நிறுத்துமாறு தெரிவித்து, இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு  கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிந்து விட்டதாக கூறவேண்டாம் என, கேட்டுக்கொண்டதுடன், அவ்வாறு கூறுவதற்கு யாருக்கும் உரிமைய இல்லை என்றும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக நியமிக்க தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .