2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கங்காராம விகாரைக்கு அருகில் பிச்சைக்காரரின் சடலம் கண்டெடுப்பு

Super User   / 2010 ஜூன் 15 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிச்சைக்காரர்களின் தொடர் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், கங்காராம விகாரைக்கு அருகில் மற்றுமொரு பிச்சைக்காரர் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.

மேற்படி சடலத்திற்கான பிரேத பரிசோதனை  அறிக்கையை   நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரட்ன   உத்தரவிட்டார்.

தலையில் காயமடைந்த நிலையில் குறித்த பிச்சைக்காரரின் சடலம் காணப்பட்டதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில்  பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த மே மாதம் 14ஆம் திகதி தலையில் காயங்களுக்குள்ளான நிலையில் பிச்சைக்காரர்கள் இருவரின் சடலங்கள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.



You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 16 June 2010 09:07 PM

    பிச்சைக்காரர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது, யாரும் அதிகம் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. பிச்சைக்காரர்கள் தானே என்ற அலட்சியமாக இருக்கலாம், வேறு யாரும் என்றால் உறவினர்கள் வழக்கறிஞர்களுக்கு செலவழிப்பார்கள் இதற்காக யார் முன் நிற்கப்போகின்றார்கள்? முதலில் யார் மீது சந்தேகம் என்றாவது பொலீஸ் கூறவேண்டாமா? சந்தேக நபர் இல்லாத வழக்கு உண்டா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X