2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையமொன்று மதுவரித் திணைக்களத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசேட சோதனை நடவடிக்கைகளை, மதுவரித்திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி கிரானில் உள்ள பறங்கியாமடு பகுதியில் உள்ள வீட்டுத்திட்டத்துக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்கி வந்திருந்த நிலையில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கான கோடா 30,000 மில்லி லீற்றரும், 10,000 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பிரதான பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .