2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கூட்டமைப்பு அரசியல் கட்சியாக இன்று பதிவு? மாவை சேனாதிராசா மறுப்பு

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்துக்குசற்று முன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து,தமிழ்மிரர் இணையதளம் உடனடியாக கூட்டமைப்பின் செயலாளர்  மாவை சேனாதிராசாவிடம் வினவியது.

தாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்,இதுவரை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தமிழ் மிரர் இணையதளத்திடம் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X