2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’கூட்டமைப்பு ஏன் தீர்வைப் பெற்றுத்தரவில்லை?’

Editorial   / 2020 மார்ச் 07 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கமும் அதனை சூழ வாழும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதோடு, ஏன் கூட்டமைப்பு இவர்களதுப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தரவில்லை எனவும் வினவியுள்ளார்.

நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மக்களுடனான சந்திப்பு இன்று(07) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு, யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பல்வேறு பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் கொண்டிருந்த இந்த பகுதி மக்களுக்கும் இச்சங்கத்துக்கும் பல உதவிகளை தாம் மேற்கொண்டு கொடுத்திருந்தாலும், இப்பகுதித் தொழிலாளர்கள தேவைகள், பிரச்சினைகளும் முழுமையாக தீர்வுகாணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய சந்திப்பின்போது சங்கத் தலைவரால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பாக வாடி அமைத்தல், வெளிச்ச வீடு அமைத்தல், வான் தோண்டுதல், சங்கத்துக்குரியக் காணிக்கான உரித்தை பெற்றுக்கொள்ளல், மின்சார இணைப்பு, எரிபொருள் நிரப்பு நிலையம் போன்ற அவசியமான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வைக் வழங்கியிருக்க முடியும். கூட்டமைப்பினர் ஏன் இவற்றுக்குத் தீர்வைப் பெற்றுத்தரவில்லை எனவும் அவர் வினவியுள்ளதோடு,பொதுத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

மக்களின் ஆதரவுப்பலம் எமக்கு கிடைக்குமானால் இவ்வாறான பிரச்சினைகள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அதிகமான பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை எம்மால் பெற்றுத்தர முடியுமெனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X