2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கோட்டாவின் எக்ஸாவால் இலங்கைக்கும் அச்சுறுத்தல்’

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது கைசாத்திட்ட எக்ஸா ஒப்பந்தம், இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமெனத் தெரிவித்த பாலித ரங்கே பண்டார எம்.பி, அமெரிக்கா, தனது யுத்தக் கப்பல்களை இலங்கையில் நிறுத்தும் நிலைமையும் வரலாமென எச்சரித்தார்.  

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,   
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே, புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடமேறியது. எனினும், அது கேள்விக்குறியாகவே உள்ளது. 
அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளதுள்ளன. அது மக்களின் வாழ்க்கை சுதந்திரத்தை பறிப்பதாகவே அமைந்துள்ளது என்றார். 

வரிகளைக் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் எந்தவொரு பொருளின் விலையும் இதுவரையிலும் குறைவில்லையெனத் தெரிவித்த அவர், பொய்யான் வாக்குறுதிகள் ஊடாக, தொடர்ச்சியாக ஆட்சியில் நீடிக்க முடியாது என்றார்.

அரச நிறுவனங்களில் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பலரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்த அவர், இந்த நிலையைக் கருத்தில்கொண்டே, நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.  

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின், குரல் பதிவு விவகாரம் பூதாகரமாகியுள்ளதெனத் தெரிவித்த அவர், தவறு செய்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி துணை நிற்காது. அதற்கான எதிர்விளைவுகளை அவர் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .