2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோட்டாவை ஆதரிக்க மாட்டேன்; குமார் வெல்கம

Editorial   / 2018 செப்டெம்பர் 02 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமே நாட்டின் தலைவராகக்கூடிய தகுதியுள்ளதாக தெரிவித்துள்ள குமார் வெல்கம எம்.பி, மஹிந்த ராஜபக்ஷவை தவிர்த்து, ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ள வேறு எந்தவொரு ராஜபக்ஷக்களுக்கும் தான் ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை முன்னிறுத்துவதற்கு, அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.

மேலும் அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எவ்வாறு வடக்குக்கு மீண்டும் பிரபாகரன் வேண்டும் என்று கேட்கிறாரோ அவ்வாறே தென்னிலங்கையிலும் சிலர், ஹிட்லர் ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள் என, கோட்டாவை கடுமையாக அவர் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X