2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடற்பரப்பில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை நீக்கும் நடவடிக்கை நிறைவு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்துராஜவல எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டுச் சென்ற குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, கடற்கரையில் படிந்த எண்ணெய் படலத்தை அகற்றும் நடவடிக்கைகளை இன்றுடன் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மற்றும்  கடற்பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் என 300 இற்கும் மேற்டபட்டவர்கள் இணைந்து இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 8ஆம் திகதி முத்துராஜவல களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, திக்கோவிட்ட தொடக்கம் உஸ்வெட்டகிய்யாவ வரையான கடற்பரப்பில் எண்ணெய் படலம் படியத் தொடங்கியது.

 அத்துடன், சுமார் 25 டொன் எரிபொருள் இவ்வாறு கசிவடைந்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர் ரியல் அட்மிரல் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த எண்ணெய் கசிவுக்கு நிறவனத்தின் மேலதிகாரிகளின்  கவனயீனமே காரணமென,  தொழிற்சங்கங்கள் குற்றஞ்செலுத்தியுள்ளதுடன், வெடிப்பு ஏற்பட்ட குழாய்க்கு பதிலாக புதிய குழாயை பொருத்தும்படி பணியாளர்கள்  பலமுறை மேலதிகாரிகளிடம் அறிவித்த போதிலும், இது தொடர்பில் அவர்கள் கவனமெடுக்கவில்லை என்றும் இலங்கை எரிபொருள் கூட்டுதாபனத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .