2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்டியில் நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்ற உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாநகர எல்லைக்கு உட்பட்ட வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும்  நடைபாதை வியாபாரக் கடைகள் நாளை பலவந்தமாக அகற்றப்படவிருப்பதாக   நடைபாதை வியாபாரக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், குறித்த இடத்தில் தமது வியாபார நடவடிக்கைகள் சிறந்த முறையில் இடம்பெற்றுவருவதுடன், இதனால் அந்த இடத்திலிருந்து தமது நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்றமுடியாது எனவும் நடைபாதை வியாபாரக் கடை உரிமையாளர்கள் குறிப்பிட்டனர். 

கண்டி வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கண்டி மாநகர பதில் மேயர் சுமிந்த  விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.  இதனையடுத்தே, கண்டி மாநகர எல்லைக்கு உட்பட்ட வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதை வியாபாரக் கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதேவேளை, இந்த நடைபாதை வியாபாரக் கடைகளை அமைப்பதற்கு பிறிதொரு இடம் வழங்கப்படவிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.





You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 25 April 2010 08:58 PM

    கொழும்பிலும் அவ்வாறு செய்யப்படலாம் என்று யூகங்கள் தெரிவிக்கின்றன! எளிதில் சந்திக்க முடியாதவரது அமைச்சு அது. 'நகர அபிவிருத்தி அதிகார சபை'. நகர சபை நரக சபை ஆகி வெகு காலம் நரக பிதாக்கள் எல்லாம் இதை கண்டு கொள்வதே இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X