2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கினிகத்ஹேனவில் கட்டடங்கள் தாழிறங்கின

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 07 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், கினிகத்ஹேன பெரகொல்ல பிரதேசத்தில் இரண்டுமாடிக் கட்டடங்கள் தாழிறங்கிவிட்டன. இதனால், அந்த கட்டடத்துக்கு கீழுள்ள இரண்டு வீடுகளைச் சேர்ந்த அறுவர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று கினிகத்ஹேன பிரதேச செயலாளர் ஆர்.டி.பீ சுமனசேகர தெரிவித்தார்.

தாழிறங்கிய, இரண்டு மாடிக்கட்டடத்துக்கு அருகில் உள்ள கட்டடமும், பிரதான வீதியும் தாழிறங்கி கொண்டிருக்கின்றன என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்தன.

இரண்டுமாடிக் கட்டடங்கள், நேற்று (06) மாலை 5 மணியளவில் தாழிறங்கியதாகவும், இன்று (07) காலை 7 மணிவரையில், தாழிறங்கும் நிலைமையானது மிகவும் மோசமானதாக காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் ஒரு பக்கமும் தாழிறங்கி கொண்டிருக்கின்றமையால், வாகன போக்குவரத்து, ஒரு ஒழுங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கனரக வாகனங்கள், அதிபாரம் கொண்ட லொறிகள் பயணிப்பது தடைச்செய்யப்பட்டுள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

மகாவலி கங்கையின் கிளை ஆறுகளில் ஒன்றான, ஹட்டன் ஓயாவுக்கு மேலே, இந்த தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. தாழிறங்கிய இரண்டு மாடிக்கட்டடமானது உணவகமாகவே இருந்துள்ளது  என்றும் கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை, குறித்த பிரதேசத்தில் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிக்கும், மகாவலி கங்கைக்கும் இடையில், குடியிருப்போர், பாரிய அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தேசியக் கட்டிடட ஆராய்ச்சி நிறுவகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .