2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோப் குழுவின் தடயவியல் அறிக்கை விரைவில்

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

கோப் குழுவின் தடயவியல் அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஐ.தே.கவினர், சபாநாயகரிடம் கூட்டாகக் கேட்டுக்கொண்டனர்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்கவாது கூட்டத்தொடர், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில், இன்று (3) நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன டி.சில்வா, ரவி கருணாநாயக்க, அஜித் பி பெரேரா ஆகியோர், மத்திய வங்கியின் உண்மையான திருடர்களைக் கண்டறிய, கோப் குழுவின் தடயவியல் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர்.

கோப் குழுவின் தடயவியல் அறிக்கையை அரசாங்கம் மூடிமறைப்பதுபோல எதிரக்கட்சியனர் கருத்துத் தெரிவிப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, நிமல் லன்ஷா ஆகியோர் கூறியதோடு, குறித்த அறிக்கையை நாடாளுமன்றில்  சமர்ப்பிக்க வேண்டுமெனவும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.

2002ஆம் ஆண்டு முதல் 2015 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற முறைமைத் தொடர்பில் குறித்த தடயவியல் கணக்கறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினருக்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, குறித்த தடயவியல் அறிக்கைத் தன்னிடம் இல்லை எனவும், ஆனால் அதனை வெளியிட ஆலோசனை வழங்குவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X