2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொம்பனித்தெருவில் வீடுகள் இடிப்பு; கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மே 14 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் அமைந்திருந்த வீடுகளை அகற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தற்போது நடைபெற்று வருகின்றது.

பொலிஸாரின் விஷேட பாதுகாப்புக்கு மத்தியில் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதோடு பெரும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சபீக் ராஜப்டீன் மேல் மாகண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார

கடந்த சனிக்கிழமை கொம்பனித்தெரு மியூஸ் வீதியில் அமைந்திருந்த 21 வீடுகளை சட்டவிரோத வீடுகள் என்று கூறி நகர அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கூறியதாவது :-

ஆடு,மாடுகளைப்போன்று மக்களை வெளியேற்ற முடியாது. பாதுகாப்புச் செயலாளரின் கீழ் நகர அபிவிருத்திசபை கொண்டுவரப்பட்டதன் பின் பல அநியாயங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும். இந்நிலையில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக நாம் நீதிமன்றத்துக்குச் செல்ல தயாராக உள்ளோம் என்றார்.

இதேவேளை, அங்கு உரையாற்றிய மேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், 

வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்களை 24 மணித்தியாலத்துக்குள் பிரபாகரன் வெளியேற்றினார். ஆனால் ராஜபக்ஸ குடும்பத்தினர் இரண்டு மணிநேரத்துக்குள் கொம்பனித்தெரு பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களை வெளியேற்றினர்.

இதற்குக் காரணம் பதுகாப்புப் பிரச்சினை எனக் கூறுகின்றனர். உண்மையில் இதற்குக் காரணம் பாதுகாப்பு என்றால், ஜனாதிபதி மாளிகையில் இருக்கவேண்டிய ஜனாதிபதி எதற்காக அலரி மாளிகையில் தங்கியுள்ளார்?

85 வருடங்களாக வாழ்ந்த வீடுகளை விட்டு எழும்பச் சொன்னால் அந்த மக்கள் எழும்புவார்களா? இதற்கான நோக்கம் என்னவெனில், கொழும்பில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களின் பெரும்பான்மையைக் குறைத்து சிறுபான்மையாக்குவதே அவர்களின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.(R.A)



You May Also Like

  Comments - 0

  • thiyagu Sunday, 16 May 2010 12:45 AM

    இது ஒரு பெரிய அநியாயம் வாப்பா. அல்லா கட்டாயம் அவங்களுக்கு தண்டனை கொடுப்பான்.

    Reply : 0       0

    xlntgson Sunday, 16 May 2010 08:49 PM

    நகரஅபிவிருத்தி அதிகாரசபையில் பெயர்குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி மாதம் எட்டாயிரத்துக்கு வீடு ஒரு வருஷத்துக்கு பணம் தருவதாக சொன்னாராம். அந்த பணம் கைக்குள் வருவதற்குள் மாதா வாடகை பதினாறாயிரம் ஆகிவிடும் உடைத்து நொறுக்கிவிட்டா மாற்று ஏற்பாடு செய்வார்கள்? ஒரு அரசின் அனுமதியை இன்னோரரசு அங்கீகரிப்பதில்லை இடித்தபின் வழக்கு பேசுவது நடுரோட்டில் இருந்துகொண்டா, இதுதான் நீதி? இலஞ்சம்கொடுத்து சட்டவிரோதத்தை எல்லாம் சட்டப்படி ஆக்கிகொண்டனராம் கோப்புகள் கணனிகள் காணவில்லையாம் ஏழைகளுக்குத்தான் புல்டோசர் உடைப்பு?

    Reply : 0       0

    sheen Thursday, 20 May 2010 09:24 PM

    ஒருபேச்சுக்குத்தான் சொல்வார்கள் ' நான் நடுவீதியில் நிற்கவா?', என்று காரணமில்லாமல் நின்று கொண்டிருந்ததாக(loitering) வழக்கு போடப்படும், பெண்களுக்கு விபசாரவழக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை. ஆனால் வீடுகள் கட்டாமல் இவ்வாறானவர்களை வெறும் அறிவித்தல்களை கொடுத்து இடித்துநொறுக்கி அப்புறப்படுத்தவேண்டாம் என்று ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றாராம் காலம்கடந்தஞானம் என்றாலும் அதிகாரிகள் அவ்வாறே செயல்படுவார்களாக! அரசுக்கு சாபமின்றி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .