2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கம்பஹாவில் அதிகம்; வன்னியில் குறைவு

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு கோரப்படவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன்,  2019 வாக்காளர் இடாப்பு இம்முறை பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

162,63,885 பேர் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், தேர்தலில் வாக்களிப்பதற்கு அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 17,85,964 வாக்காளர் உள்ளனர்.

இதேவேளை, நாட்டில் குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் பதிவாகியுள்ளது. 

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2,87,024 வாக்காளர்கள் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .