2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேரளாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களிடம் விசாரணை

Super User   / 2010 மே 09 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 36பேரிடம் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் நகருக்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே அவர்களிடத்திலான விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
 
உரிய ஆவணங்கள் இல்லாமல் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இவர்கள், கொல்லம் நகரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் என்ன காரணத்துக்காக அங்கு வந்தார்கள் என பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஐந்து பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட 36 இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டில் சென்னை நகரில் இருந்து பல்வேறு வழிகளில் கேரள மாநிலம் கொல்லம் நகருக்கு சென்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கொல்லம் நகர பொலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அடலூரி, இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை மட்டுமே நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளோ, ஆவணங்களோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
அதே நேரத்தில், அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி, அவர்களிடமிருந்து 2 இலட்சம் மூதல் 5 இலட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்ததாகக் கூறப்படும் சிவா, டெனிஸ் ஆகிய இரண்டு முகவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் பொலீஸ் கண்காணிப்பாளர் ஹர்ஷிதா அடலூரி மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X