2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை நீங்க வேண்டும்’

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் குற்றவாளிகள், தண்டனைகளிலிருந்து விடுதலையாகும் நிலைமை அதிகரித்துள்ள நிலையில், இந்த நிலைமையை நீக்கிக்கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சர்வதேச அமைப்பொன்று கோரியுள்ளது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால், கடந்த 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட The Elders (தி எல்டர்ஸ்) என்ற முதியோர் சர்வதேச அமைப்பினாலேயே, மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கண்டி மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் இடம்பெற்ற இன ரீதியான சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள ​மேற்படி அமைப்பு, குறித்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்குரிய தண்டனையை வழங்க, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ, யார் குற்றத்தை மேற்கொண்டிருந்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, அவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாமெனவும் வலியுறுத்தியுள்ள தி எல்டர்ஸ் அமைப்பு, குற்றவாளிகளுக்கு எதிராக, கடுமையான சட்டத்தைப் பிரயோகிப்பதன் மூலம், இனிவரும் காலங்களில், இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

எச்தவொரு தரப்பும், சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொள்ள இடமளிக்க வேண்​டாமெனவும் குறிப்பிட்டுள்ள அவ்வமைப்பு, அவ்வாறில்லாவிடின், மேற்படிச் சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பளிக்கப்பட்டு விடுமெனச் சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .