2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காலி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் களேபரம்

Editorial   / 2017 மே 23 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையே, பெரும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதால், அக்கூட்டம் மிகவும் சூடு பிடித்திருந்தது.  

அக்மீமன, வலஹன்துவ தோட்டக் காணியொன்றைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் கபுஹேம்பல நந்திமித்ர வித்தியாலயத்துக்கு காணியொன்றைச் சுவீகரித்தல் விடயம் தொடர்பில், ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுகையிலேயே, இந்த அமைதியற்ற சூழல் நிலவியது.  

சு.க.வின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ரமேஸ் பத்திரண மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேபால ஹெட்டியாரச்சி ஆகியோருக்கிடையேயே, இந்த களேபரமான நிலைமை உருவெடுத்தது.  

சு.க.வின் தென் மாகாணசபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமாரவும், ரமேஸ் பத்திரணவுக்கு சார்ப்பான கருத்துகளை வெளியிட்டதை அடுத்து, கூட்டத்தில் அமைதியின்மை தோன்றியது.  

கூட்டத்தில் கருத்து தெரிவித்த பத்திரண எம்.பி, “நந்திமித்ர வித்தியாலயத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணியொன்று, வேறு ஒருவருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. யக்கஹா சந்தியிலுள்ள விஞ்ஞான பீடத்துக்கு அருகிலான 25 ஏக்கர் காணியொன்றும், வர்த்தகர் ஒருவரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.  

இதற்குப் பதிலளித்த விஜேபால எம்.பி, “அதற்காக நான், துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போய், அவற்றை நிறுத்தவா முடியும்? கடந்தகால ஆட்சியின்போது தான், இந்தக் காணிகள் கைமாறியிருந்தன. அப்போது ஏன் நீங்கள் இது பற்றிப் பேசவில்லை? அத்துமீறிய வகையில், எந்தவொரு காணியும் கையகப்படுத்தப்படவில்லை” என்றார்.  

இதன்போது கருத்துரைத்த பத்திரண, “இந்தக் காணிப் பிரச்சினையில் தலையிடுமாறே, நாங்கள் உங்களிடம் கோருகின்றோம். எமது ஆட்சிக் காலத்தின் போது, காணிகளை நாம் பாதுகாத்தோம்” என்று கூறியதும் பதிலளித்த விஜேபால எம்.பி, “நான் ஒருவருக்கும் காணி வழங்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. நானும் எந்தவொரு காணியையும் எடுத்துக்கொள்ளவில்லை” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X