2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

க்ளைபோசெட்டுக்காக குறிப்பாணை சமர்ப்பிப்பு

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ள க்ளைபோசெட் களைகொல்லியை, வரம்புக்கு உட்பட்ட நிலையின் கீழ் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி, அதிவிசேடமான குறிப்பாணை தொடர்பில், நேற்றைய அமைச்சரவையில் விரிவாகக் கலந்துரை -யாடப்பட்டதாக அறியமுடிகின்றது.

இந்த குறிப்பாணை, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவால், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.   

இந்த க்ளைபோசெட் களைக்கொல்லி பயன்பாட்டினால், சிறுநீரகக் கோளாறு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள், மக்கள் மத்தியில் வெகுவாகப் பரவுதல் மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுவதன் காரணமாக, இந்தக் க்ளைபோசெட் களைகொல்லி தடைச்செய்யப்பட்டது.  

கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலேயே அந்த க்ளைபோசெட் களைகொல்லியை, இறக்குமதி செய்வதால், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2015ஆம் ஆண்டில் தடைவிதித்தார். க்ளைபோசெட் களைகொல்லி வரம்புக்கு உட்பட்ட நிலையின் கீழ் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குறிப்பாணையானது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைவகிக்கும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பிலான அமைச்சரவைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படாமல், அமைச்சரவைக்கே நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.   

இதேவேளை, க்ளைபோசெட் களைகொல்லி தடைச்செய்யப்பட்டமைக்கு பின்னர், முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில், பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி தொடர்பிலான கொள்கையை ஆய்வு செய்வதற்கான குழு, தன்னுடைய தொழில்முறையான இயல்பை முன்னெடுக்கவில்லையென அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .