2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மாகாண அமைச்சர் பதவி கிடைக்காமைக்கு அமீர் அலி காரணம் - ஜவாஹர் சாலி

Super User   / 2010 மே 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு கிடைக்கவிருந்த கிழக்கு மாகண சுகாதார அமைச்சர் பதவியை வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர் அமீர் அலி தனக்கு கிடைக்காமல் தடுத்தார் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹர் சாலி சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார். 

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கிழக்கு மாகண சுகாதார அமைச்சர் பதவியை தனக்கு கிடைக்காமல் செய்ததன் மூலம் கல்குடா தொகுதி மக்களுக்கு பாரிய ஒரு தவறை முன்னாள் அமைச்சர் அமீர் அலி செய்துவிட்டார். அத்துடன் தனக்கு இப்பதவி வழங்கப்பட்டால் முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் எதிர்கால அரசியலுக்கு பாதகமாக அமைந்து விடும்  என்ற காரணத்தால் தான் தடுத்ததாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் அமீர் அலி கல்குடாத் தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு தொலைபேசி மூலம் தான் செய்தது சரியொன்றும் இதற்கான பலனை பின்னர் அனுபவிப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிற்பாடு எப்படியோ தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கு முயற்சித்தார். அது பயனலிக்காததால் வெற்றிடமாக இருந்த கிழக்கு மாகாண சபை  சுகாதார அமைச்சர் பதவிக்கு எப்படியோ  உறுப்பினராகி அமைச்சர் பதவியை பெற முயற்சித்தார். அதுவும் பயனளிக்காததால் தனக்கு ஏதிராக செயற்பட்டார் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹர் சாலி குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் அமீர் அலி உடன் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.(R.A)



You May Also Like

  Comments - 0

  • m.h.mohamed Monday, 24 May 2010 01:14 AM

    பாவம் ஜவாஹர் சாலி!

    Reply : 0       0

    meeravodaian Monday, 24 May 2010 03:27 PM

    அமீர் அலி சமூகத்தை பற்றி சிந்திக்காதவன். சுயநலவாதி அதனால்தான் இறைவன் கடந்த தேர்தலில் தண்டனை வழங்கினான்.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 26 May 2010 09:38 PM

    அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்! நான் எழுதினேன்; அவர்கள் பிரதேசஅரசியல் புரிந்த பாவத்துக்காக தண்டிக்கப்பட்டார்கள் என்று இப்போது முஸ்லிம்காங்கிரசும் சுழற்சிமுறை என்று பிரதேசஅரசியல் தானே செய்கின்றது. யாரும் எனக்கு ஒன்றுதான். அரசியல் சார்பற்று அரசியலை ஊடக சார்பாக மக்களுக்காக சிந்தித்து எழுத வேண்டும். எங்கும் சுயநலம் நிரம்பி இருக்கிறது, சுயநலமற்றவர்களை பார்ப்பதும் அபூர்வமாக இருக்கிறது, உண்ணாமல் குடிக்காமல் இருக்கும் ஒருயோகியை மக்கள் தெய்வம் என்கின்றனராம் நான் நினைக்கின்றேன் அவன் சுயநலமற்றவனே, ஒருவன்!

    Reply : 0       0

    mullah kareem Thursday, 27 May 2010 04:09 AM

    தலமைத்துவ விசுவாசத்துக்கு அப்பாற்பட்ட ஒரே மனிதன் இந்த ஜவாகிர். கல்குட பிரதிநிதித்துவம் பறிபோவதற்கு துணை நின்றவர். கிழக்கு சுகாதார அமைச்சே கல்குடா மக்களின் மனிதம். இதனைக் காப்பதற்கு இவருக்கு தார்மிக உரிமை கிடையாது. திழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக பல இளைஞர்களிடம் காசு வாங்கி ஏமாற்றியதுக்கான நான்கு பிடி விராந்துகள் இன்றும் வாழைச்சேனை நீதி மன்றத்தில் உள்ளன. இந்த அமைச்சும் கிடைத்திருந்தால் கல்குடாவை விற்றிருப்பார். அல்லாஹ் காப்பற்றினார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .