2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் கட்டாக்காலி நாய்கள் குறைவடைந்துள்ளன

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் பிரதான மிருக வைத்திய அதிகாரி விபுல தர்மவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்குள் கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியாக முன்னெடுக்கப்பட்ட கட்டாக்காலி நாய்களின்  கணக்கெடுப்பின் எண்ணிக்கையுடன் இம்முறை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சிக் குறித்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன், கடந்த சில வருடங்களில் நாய்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இனப்பெருக்க கட்டுப்பாடே இதற்கான காரணமெனவும் வைத்திய அதிகாரி விபுல தர்மவர்தன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .