2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பிற்கும் கட்டுநாயக்காவிற்கும் இடையிலான வீதிகளில் வெள்ளநீர்

Super User   / 2010 மே 19 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் கடும் மழை பெய்து வரும் நிலையில் வீதிகளில் வெள்ளநீர் காணப்படுவதால், கொழும்பிற்கும் கட்டுநாயக்காவிற்கும் இடையிலான சில பகுதிகளிலுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் மாற்று வழிகளின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி, சீதுவை பொலிஸ் பிரிவு வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் காணப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

மேற்படி வீதிகளின் ஊடாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் போன்ற சிறியரக வாகனங்கள் பயணிப்பதில் சிரமம் காணப்படுவதாகவும் பிரஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.

இருப்பினும் கனரக வாகனங்களின் பாவனையாளர்கள் முக்கிய தேவையேற்படின் மாத்திரம் மேற்படி வீதிகளினூடாக பயணிக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

 



You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 22 May 2010 08:12 PM

    ஜா-எலயை தாண்டி ரயில் கடவையை கடந்ததும் இடப்புறமாக வரும் பாதை மட்டும்தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அதுவும் கூட வாகன நெரிசலால் பாதிக்கப்பட்டதோடல்லாமல் சில இடங்களில் சேரும்சகதியுமாக 'தார்' போடப்படாத நிலையில் இருந்தது. இந்த வழியாக விமானநிலையம் மட்டுமல்ல விமானப்படை வாகனங்களும் இரத்தொழுவைக்கு & மினுவங்கொடவுக்கு போகவேண்டியதிருந்தது. வேறு வழியே இருக்கவில்லை! நீர் வடிந்தும் கூட கட்டுநாயக மினுவங்கொட பாதையே திறக்கப்பட்டது.

    Reply : 0       0

    nuah Wednesday, 26 May 2010 09:10 PM

    சேர்,சகதி,வாகன நெரிசலால் சேறு கருப்பு தயிர் கடைந்தது போல் ஆகி இருக்கும் அல்லவா? எல்லா இடங்களிலும் இதே கதைதான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .