2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் வெளியேற்றப்படுவாரா?

Super User   / 2010 ஜூன் 23 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVE கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்ட நிலையில் முன்னாள் மேயர் இம்தியாஸ் முஹம்மட் தொடர்ந்து மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் தங்கியிருப்பதாக அரசாங்க வட்டார தகவல்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.

கடந்த வருடம் ஜுலை முதல் கொழும்பு மாநகர சபை இடை நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும்  மேயர் இம்தியாஸ் முஹம்மட் மற்றும் பிரதி மேயர் ராஜேந்திரன் ஆகியோர் உத்தியோகபூர்வ வாசஸ்தளம், மாநகர சபையின் வாகனம்,  பாதுகாப்பு போன்ற அனைத்து சலுகைகளையும் இன்று வரை அனுபவித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாநகர சபை உறுப்பினர்களும், சபை இடை நிறுத்தப்பட்ட பிற்பாடு  தொடர்ச்சியாக மாதாந்த சம்பளத்தை பெற்று வந்துள்ளனர். அத்தோடு அவர்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திலிருந்து வெளியேறுமாறு முன்னாள் மேயர் இம்தியாஸ் முஹம்மட்  அறிவிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.

நேற்று கொழும்பு மாநகர சபை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் கலைக்கப்பட்டது.(R.A)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X