2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புலம்பெயர் தமிழர்களின் பார்வையில் கே.பி. ஒரு துரோகி - செல்வம் அடைக்கலநாதன்

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் தமிழ் மக்கள், புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதனை (கே.பி) ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்றுமுன் கூறினார்.

இதேவேளை, போருக்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கே.பி முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இருப்பினும் அவரது இந்த நடவடிக்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்றும் அடைக்கலநாதன் எம்.பி சுட்டிக்காடினார்.

புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக செய்தியொன்று வெளியானது.

இந்த செய்தி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கருத்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து கூறிய எம்.பி, பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவ்வாறே தடுத்து வைத்திருப்பதில் நியாயம் இல்லை.

இந்நிலையில், அவர்களே அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் சொன்னார்.

கே.பி.யைப் பொறுத்த வரையில் வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் தமிழர்கள், அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். இந்நிலையில் அவரது கூற்றுக்கு அங்குள்ள மக்கள் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று அடைக்கலநாதன் எம்.பி மேலும் சுட்டிக்காடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .