2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கி.மா.சபை உறுப்பினர்கள் நாடு திரும்பியும் இந்தியாவில் தங்கியிருக்கும் பிள்ளையான்

Super User   / 2010 ஜூன் 14 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமே தவிர,  இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் அல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களையும்உள்ளடக்கிய குழு ஒன்று கடந்த வாரம் இந்தியாவின் கேரளா பகுதிக்கு  சென்றிருந்தது.

இக்குழு உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பினர். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடு திரும்பாமல் புதுடில்லியில் தங்கியுள்ளார்.

இது சம்பந்தமாக இந்தியாவில் தங்கியுள்ள  முதலமைச்சருடன் தமிழ்மிரர் இணையதளம் நேரடியா தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு அவர், தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமாகும். இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் இங்கு வரவில்லை.

ஒரிரு  நாட்கள் இங்கு கழித்து விட்டு, கேரளா சென்று இரண்டாவது குழுவாக இந்தியா வந்துள்ள எமது மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளேன். அதன் பிற்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளேன் என்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.(R.A)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .