2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத கட்டிடம் அகற்றும் நடவடிக்கை தொடரும்-அரசு எச்சரிக்கை

Super User   / 2010 மே 06 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சட்டவிரோதக் கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியை திறந்து வைப்பதற்காக பாதுகாப்புச் செயலாளரும், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருமான கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலை கிளிநொச்சி சென்றிருந்தார். இந்த நினைவுத்தூபியை திறந்துவைப்பதற்கு முன்பாக  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் கூறினார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், ஏனைய நகரங்களைப் போன்று அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது எனவும் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார். கொழும்பு, கண்டி, காலி மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்த சட்டவிரோதக் கட்டிடங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவசரகால ஒழுங்கு விதிகளில் பல தளர்த்தப்பட்டிருப்பதாகக் சுட்டிக்காட்டிய கோட்டாபய ராஜபக்ஸ, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.





You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 06 May 2010 10:08 PM

    சாலையோர கடைகள் 4 சக்கரங்களில் இயங்குகின்றன ஆனால் அசைவதாக தெரியவில்லை. அரச பரிசுச்சீட்டு கடைகள் சாலையோரத்தில் காதுகளை செவிடாக்குவதும் பாதுகாப்பு செயலாளருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவை போலீஸ் ஆதரவுடன் நடப்பதாக இருக்கும். ஒரு நகர சபை கொடுத்த அனுமதி இன்னொரு ஆட்சி வந்தால் அங்கீகரிப்படுவதில்லை. விசேட கோர்ட் ஒன்று ஏற்படுத்த வேண்டியதிருக்கலாம். மங்கள சமரவீர செய்தது போல் அவசர கதியில் செய்து கைவிடாமல் இப்பணியை சரிவர செய்யுங்கள். மக்களின் தேவை, சாலையோர தெய்வங்களுக்கு பெரும் பிரச்சினை ஆகலாம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .