2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சென்னை கொலையுடன் தொடர்பில்லை; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுப்பு

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடத்தல், அச்சுறுத்தல் மற்றும் படுகொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுப்பு தெரிவித்தார்.

இவற்றில் கடத்தலைத் தவிர்ந்த ஏனைய குற்றச்சாட்டுக்கள் என் மீது பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என்றும் அமைச்சர் கூறினார்.

தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது தவறுதலாகவே மேற்படி கொலைச் சம்பவம் இடம்பெற்றது. தவிர்ந்த குறித்த கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்து - லங்கா ஒப்பந்தத்தின் பிரகாரம் பயங்கரவாதத் தலைவர்கள் என அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் அக்காலப்பகுதியில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் 80ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இடம்பெற்ற மேற்படி குற்றச் செயல்களை தற்போது கவனத்திற்கொள்வது முறையன்று என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X